Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெல்சன் மண்டேலாவின் நினைவு அஞ்சலியின் போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சக அதிபர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் எந்தளவு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதே போன்று பரபரப்பாகியுள்ளது மற்றுமொரு நிகழ்வு.

இறுதி அஞ்சலியின் போது மேடையில் பேசிய தலைவர்களின் உரையை செவிப்புலனற்றோர் புரியும் வகையில் செய்கை மொழியால் காண்பித்தவர் ஒரு தென்னாபிரிக்கர். இவர் காண்பித்த செய்கை மொழி அனைத்தும் தவறானது. அதில் ஒரு அர்த்தமும் இல்லை என பிறகு தான் தெரியவந்திருக்கிறது.

செவிப்புலனற்றோருக்கு உதவும் நிஜ செய்கை மொழியாளர்கள் யார் இவரை மேடையில் கொண்டுவந்து நிறுத்தியது என சமூகவலைத்தளங்களில் அதிருப்தியைக் கொட்டித்தீர்த்தார்கள்.

தம்ஸங்கா ஜாந்திஜே எனும் 34 வயதான தென் ஆபிரிக்கர் ஒருவரே இத்தவறை செய்திருக்கிறார். என்னதான் நடந்தது என அவரிடமே நேரடியாக சென்று விசாரித்தன சில ஊடகங்கள். தான் மேடையில் ஏறியதும், தனக்கு முன்னாள் சில தேவதைகள் வந்து சென்றதாகவும், மூளைக்குள் வேறு சில சொற்கள் கேட்கத்தொடங்கி விட்டதாகவும் தான் Schizophernia எனும் மனநோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை எடுத்து வந்ததாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கும் அவர், தான் மேடையில் தவறுதலாக எதுவும் கூறியிருந்தால் என்னை புண்படுத்தவேண்டாம். மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறாராம்.

அவருடைய செய்கை மொழியில் மீண்டும் மீண்டும் குதிரைகள்,  மற்றும் இறாலுக்கான செய்கை மொழி பாவணையே அதிகமாக வந்திருந்ததாம். குறித்த அஞ்சலி நிகழ்வில் இவரை வாடகைக்கு அமர்த்திய நிறுவனம் தற்போது எங்கென்றே தெரியாதளவு ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறதாம்.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுன் பூதவுடலுக்கு தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை, மண்டேலாவின் சொந்த ஊரான கூனுவில் அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

0 Responses to மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அதிருப்தியை ஏற்படுத்டிய போலி செய்கை மொழியாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com