Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாண சபை உறுப்பினர்களது பாதுகாப்பு மிக முக்கியம்.அதனாலேயே ஊடகவியலாளர்களிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருவாய் மலர்ந்துள்ளார் சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம்.நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்ட வகையினில் அவமதிக்கப்பட்டமை மற்றும் அவர்கள் கடைமைகளிற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டமை  ஆகியவற்றினை கண்டித்து பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்த வரவு-செலவுத்திட்ட விவாத செய்தி சேகரிப்பினை இன்று பகிஸ்கரித்திருந்தனர்.அரச ஆதரவு ஊடகங்கள் சார்ந்த ஒரு சிலரே அங்கு செய்தி சேகரிப்பிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையினில்  ஊடகவியலாளர்கள் திட்டமிட்ட வகையினில் அவமதிக்கப்பட்டமை மற்றும் அவர்கள் கடைமைகளிற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டமை தொடர்பினில் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழப்பியிருந்தார்.அத்துடன் வி.ஜ.பி பாஸ்களுடன் சந்தேகத்திற்குரிய வெளிநபர்கள் நடமாடுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்குப்பதிலளிக்கையினிலேயே  வடமாகாண சபை உறுப்பினர்களது பாதுகாப்பு மிக முக்கியம்.அதனாலேயே ஊடகவியலாளர்களிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருவாய் மலர்ந்துள்ளார் சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம்.

எனினும் ஊடகவியலாளர்களது புறக்கணிப்பு விவகாரம் மாகாணசபை உறுப்பினர்களிடையே கடும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பினில் கட்சி கூட்டத்தினில் உரையாடவுள்ளதாகவும் சில உறுப்பினர்கள் நேரடியாக வருகை தந்து அங்கு பிரச்சன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பாதுகாப்பு முக்கியமாம்! சிவஞானம் புது விளக்கம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com