திமுக தலைவர் கலைஞர் 11.12.2013 புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில்,
கேள்வி :- இலங்கை அரசின் நடவடிக்கைகள் பற்றி காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட காமரூன் தெரிவித்த கருத்துகளை பல நாளேடுகளும் வெளியிட்டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற்போது அமெரிக்க நாடு கூட இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர் :- உண்மைதான்! “இலங்கை உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச சமூகம்இனியும் பொறுமை யாக இருக்காது” என்று தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.
“போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கையில் வரும் மார்ச் மாதத்துக்குள் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால், ஐ.நா. தலைமையிலான விசாரணை கோருவோம்” என்று இங்கிலாந்துப் பிரதமர் கூறிய கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.
0 Responses to இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவும் கண்டனம்! கலைஞர் பதில்!