Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரேபியத் தீபகற்பத்தில் இயங்கி வரும் அல்-கொய்தா தீவிரவாதக் குழு இந்த மாதத் தொடக்கத்தில் யேமெனில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை மீது தொடுத்த தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

இது குறித்து குறித்த அல்-கொய்தா இயக்கத்தின் போராளிக் குழுவின் தலைவனான காசிம் அல் றாய்மி கூறுகையில்,

'யேமெனின் சனா நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டட வளாகத்துக்குளே அல்கொய்தா போராளிகள் தாக்குதல் தொடுக்க முனைந்த போது தமது உத்தரவுகளை மீறி ஒரு போராளி செயற்பட்டு வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களையும் நோயாளிகளையும் தாக்கியதாகவும் இதனால் தான் 52 பேர் வரை கொல்லப் பட நேர்ந்தது!' என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக காசிம் மன்னிப்புக் கோரிய போது யேமென் அதிகாரிகள் மீதான தமது தாக்குதல்கள் இனிமேலும் தொடரும் என்பதையும் கூறத் தவறவில்லை.

டிசம்பர் 5 ஆம் திகதி இலக்கு வைக்கப் பட்ட பாதுகாப்பு அமைச்சுக் கட்டடத்துக்குள்ளே இருந்து தான் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களான டிரோன் விமானங்கள் கட்டுப் படுத்தப் படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைத்தியசாலை மீது தொடுக்கப் பட்ட தாக்குதலில் ஜேர்மனி, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 மருத்துவர்கள் கொல்லப் பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to யேமென் வைத்தியசாலைத் தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியது அல்கொய்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com