என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில்
சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு
நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் கூறியுள்ளார். சென்னை
வானனூர்த்தி நிலையத்தில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இதனைக்
கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
என்னை உறங்க விடாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என மகா. தமிழ் பிரபாகரன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் பதில் சொல்ல வேண்டி வரும் - தமிழ் பிரபாகரன்