வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தி அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக 72 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்தது. இந்த நடைமுறை அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த போது அமலுக்கு வந்தது என்றும் தெரிய வருகிறது.
இதை தற்போதைய அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு வரும் ஆண்டு முதல் இத்திட்டத்தை நிறுத்தி அறிவித்து உள்ளது. காரணம் பொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையே என்றும் அறிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து, இளைஞர்கள் பொருளாதார விஷயத்தில் மேம்பட்டுத் திகழ இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தியது!