Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீசா விதிமுறைகளை மீறி பாதுகாப்பு தரப்பினரின் பகுதிகளை படம் பிடித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சியின் கிராஞ்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் இன்று சனிக்கிழமை நாடு கடத்தப்பட்டார்.

கொழும்பிலிருந்து சென்னை நோக்கி இன்று மாலை 06.00 மணியளவில் பயணிக்கும் விமானமொன்றிலேயே அவர் நாடு கட்டப்பட்டுளதாக விமான நிலைய செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியில் வைத்து கடந்த புதன்கிழமை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன், கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் மீதான விசாரணைகள் முடிவுற்ற நிலையில் இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மகா தமிழ் பிரபாகரனை உடனடியாக நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்று முன்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

தொடர்புக் கட்டுரை

0 Responses to ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com