இலங்கை தமிழர்களின் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை கோரவிருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குதல் மற்றும் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை போன்ற விடயங்கள் குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு அண்மைக்காலமாக விளக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக, இந்திய மத்திய நிதி அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு சிறப்பாக இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களின் விவகாரங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கைத் தமிழர்கள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளோம் - கூட்டமைப்பு