Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேப்டன் டிவி நிருபர்கள் லாவன்யா,  சதீஷ்.  இவர்கள் மீது இன்று  சென்னை மதுரவாயலில் அதிமுக பகுதி செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.  தாக்குதலில் பலத்த காயமுயற்ற நிருபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது,  புகாரை பெற்றுக் கொள்ளாததால், காவல்நிலையத்தின் வாசலில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் குவிந்து கோஷம் எழுப்பினர்.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்கவும் மறுத்து வருகின்றனர். ஆனாலும் உறுதியாக உதவி கமிஷனர் செந்தில்குமரனிடம்,  புகாரை வாங்காவிட்டால் நாங்கள் இங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவோம் என்று பத்திரிகையாளர்கள் கூறியதும்,  எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கேயே கிடந்து சாகுங்க.  உங்க புகாரை வாங்கமுடியாது என்று கூறிவிட்டார்.  இதனை அடுத்து,  துணை கமிஷனர் சேவியர் தன்ராஜிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டபோது,  அவரும் புகாரை வாங்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் ஆவேசம் கொண்ட பத்திரிகையாளர்கள்,  எத்தனை நாள் ஆனாலும் நாங்களும் இந்த இடத்தை விட்டு போகப்போவதில்லை என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 Responses to கேப்டன் டிவி நிருபர்கள் மீதுஅதிமுகவினர் கடும் தாக்குதல் - புகாரை வாங்க போலீஸ் அதிகாரிகள் மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com