யாழ்.பல்கலைக்கழகத்தை எந்தவித முகாந்திரமும் இன்றி இழுத்து மூடியமையினை
கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்றை
நடத்தியுள்ளார்கள்.பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு இலங்கை ழுழுவதுமுள்ள
பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்பட்டிருந்த போதும் மாநாட்டின் பின்னதாக அவை
திறக்கப்பட்டிருந்தது.எனினும் யாழ்.பல்கலைக்கழகம் மட்டும் டிசெம்பர் 2ம்
திகதியான இன்று வரை மூடப்பட்டுள்ளது.
அவ்வாறு எந்தவித முகாந்திரமும் இன்றி இழுத்து மூடியமையினை கண்டித்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இன்று காலை வழமை போன்றே தமது கற்கை நெறிகளிற்கு திரும்பியிருந்த மாணவர்கள் ஒன்று கூடி கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழலாமென்ற அச்சத்தினில் படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சூழலினில் குவிக்கப்பட்டிருந்தனர்.மாணவர்கள் ஒரு கட்டத்தினில் வீதிகளை வழிமறித்து ரயர்களை கொழுத்த முற்பட்டிருந்த நிலையினில் பொலிஸார் ரயர்களை எடுத்துச்சென்றுவிட்டனர்.
கடந்த ஆண்டினில் தமிழீழ மாவீரர் தின அனுஸ்டிப்புக்களையடுத்து மூண்ட குழப்ப சூழலை கருத்தினில் கொண்டு இம்முறை பல்கலைக்கழகத்தை நிர்வாகம் இழுத்து மூடியிருந்தது.எனினும் அதனையும் தாண்டி மாவீரர் தூபியினில் மாணவர்கள் சுடரேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! பதற்றத்தினில் பல்கலைக்கழக சூழல்!!