Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டது போல, தமிழகத்தில் இருந்தும் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் இன்று மாலை மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய போது இலங்கை வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும், மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதற்குக் கண்டனம் என்று பல விஷயங்கள் குறித்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த முடிவை கழக பொது செயலாளர் ஜெயலலிதாவிடமே விட்டு விடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கடைசியாக பேசிய ஜெயலலிதா, தமிழகம், புதுவை என்று மொத்தம் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என்றும்,

இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் கூறியுள்ள ஜெயலலிதா, தமிழகத்துக்கு நல்லது செய்யும் தலைவர் மட்டுமே பிரதமராக வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு உத்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டதைப் போல, தமிழகத்தில் இருந்தும் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Response to உத்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்று தமிழகத்தில் இருந்தும் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும்! - ஜெயலலிதா

  1. Your dream of becoming PM of India will never come in to true. Nor the North Indians will let you come as PM. Forget it.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com