முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்ட இடம் கட்டிடம் கட்டுவதற்கு முறையான இடம் இல்லை என்று, முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வாயில் இடிக்கப் பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உலகத் தமிழர் பேரவை சார்பில் தஞ்சாவூர் சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இது நெடுஞ்சாலை அமைப்பதற்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறிய, நெடுஞ்சாலைத் துறையினர் முள்ளிவாய்க்கால் நினவு முற்றத்தின் வாயிலை இடித்து தள்ளினர்.
இது முறைப்படி வாங்கிய இடத்தில்தான் கட்டப்பட்டது என்று பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் கட்டப்பட்ட இடம் குறித்து அந்த ஊர் பஞ்சாயத்தார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் இது முறையான இடத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் இல்லை என்று கூறிவிட்டால், அந்த ஊர் பஞ்சாயத்தே இது குறித்து முடிவு செய்யலாம் என்றும்,
இன்னும் ஒரு வார காலத்துக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அதோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நுழைவு வாயிலை இடித்ததற்குப் பதில் அளிக்கும் வகையில் நெடுஞ் சாலைத் துறையினரே அதைக் கட்டித்தர வேண்டும் என்று பழ.நெடுமாறன் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முறையான இடத்தில் கட்டப் படவில்லையா?