Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்களை விசாரணைக்கு தேவைப்படும் என்று இத்தாலி நிறுவனம் வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயணிக்க அதி நவீன வசதிகள் கொண்ட 12 ஹெலிகாப்டர்களை வாங்க ஆங்கிலோ-இத்தாலி நிறுவனமான அகஸ்தா வேஸ்டேல்ன்ட்  நிறுவனத்திடம்  இந்தியா ஒப்பந்தம் போட்டதில் ஊழல் பேரம் நடந்ததாக கடந்த ஆண்டு குற்றசாட்டு எழுந்தது.

மொத்தம் ரூபாய் 3 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக,  அந்த நிறுவனம் ரூபாய் 362 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த ஊழல் குற்றசாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரனையைத் தொடங்கிய சிபிஐ, முன்னாள் விமானப்படைத் தளபதி  எஸ் பி தியாகி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பகோடியா  சகோதரர், சதீஷ் பகோடியா, உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு  செய்தது.

இதை அடுத்து  வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இத்தாலி நிறுவனம் ஒப்படைத்து உள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்களை வழங்கியது இத்தாலி நிறுவனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com