வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகளவான பிரசன்னம் இருப்பதனாலேயே மற்றைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி சலோக பெயானியிடன் எடுத்துரைத்துள்ளார்.
இராணுவத்துடன் சேர்ந்து தெற்கிலுள்ள சிங்கள மக்களையும் குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்காகவே, பொதுமக்களின் காணிகளை இன்னமும் இராணுவம் கையகப்படுத்துகின்றது என்றார்.
கிழக்கு மாகாணத்திலும் இதுதான் நடந்தது. அது தற்போது வடக்கிலும் நடைபெறுவதற்கான ஆயதங்கள் தெரிகின்றது. இதனை எம்மால் தடுக்க முடியாது. இதனை உலக நாடுகளே தடுத்து நிறுத்தி எமக்கு விடிவை தரவேண்டும். மக்களின் வாழ்விடங்களை அத்துமீறி எடுத்து வைத்து கொண்டு விவசாயம், மீன்பிடி, கடை என இராணுவம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதனால், மக்கள் தொடர்ந்தும் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானிக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களுக்கு பின்னரான வடக்கு மாகாணத்தின் நிலவரங்களை நேரடியாக அவதானிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்தார். இன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது ஆளுநர் இல்லத்தில் சந்தித்து பேசிய சலோகா பெயானி, அதன் பின்னர் வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்.
அத்தோடு, யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களையும், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசியுள்ளார்.
நாளை புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய இராணுவத்தளபதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதன்பின்னர் கொழும்பு வரும் அவர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

0 Responses to இராணுவமே வடக்கில் பிரச்சினைகளின் மூலகாரணம் - ஐ.நா.வின் பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு