வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் நிலையற்ற வாழ்க்கையினையே கொண்டிருப்பதாக, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் சலோகா பயானி தெரிவித்துள்ளார்.
தமது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னும் நீண்டகால இடப்பெயர்வுக்கு உட்பட்டவர்களாக வாழ்கின்றனர்.
சிலர் குடியேற்றப்பட்டுள்ள போதும், அவர்களது சொந்த இடங்களில் அன்றி, ஏதேனும் ஒரு பகுதியில் குடியேற்றப்பட்டு, தற்காலிக கூடாரங்கள் போன்றவற்றிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனை நிலையான குடியேற்றம் என்று கருத முடியாது.
அதேநேரம் அதிகரித்த இராணுவ தலையீடு, இடத்துக்கு இடம் நகரும் சுதந்திரம் இன்மை, தாங்கள் விரும்பிய பகுதிகளில் தங்கி வாழ்வதற்கான உரிமை வழங்கப்படாமை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இன்மை, உரித்துடைய காணிகள் மீள வழங்கப்படாமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் நிலையற்ற வாழ்க்கையினையே வாழ்கின்றனர் - சலோகா பயானி அறிக்கை சமர்ப்பிப்பு