சிங்கப்பூரில் நடந்த கலவரம் காரணமாக 52 இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்திய விவகாரம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிச.8ம் திகதி, தனியார் பேருந்து விபத்து ஒன்றில் (ஓட்டுனர் வெளியே தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு) தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு பெரிய அளவில் கலவரம் மூண்டதுடன், 16 பொலிஸார் வாகனங்கள், 25 தனியார் வாகனங்கள், தீ வைத்து கொளுத்தப்பட்டன. 39 பொலிஸார், கலவரத்தில் ஈடுபட்டோர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
49 வருடங்களில் நடந்த மிக மோசமான வன்முறையாக பதியப்பட்ட இதில் நேரடியாக தாக்குதலுடன் தொடர்புடையதாக 52 இந்தியர்கள் கைதானார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்தது. இவர்கள் அனைவரும் கலவரத்தை தூண்டியவர்கள், நேரடியாக கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தபப்ட்டு அவர்களை இந்தியாவுக்கே நாடு கடத்தியுள்ளது. இனிமேல் சிங்கப்பூரில் எப்பாகத்திற்கும் இவர்கள் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாவார்கள்.
இதற்கு சிங்கப்பூர் மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு வெளியேற்றிய தமிழர்களுக்கு சிங்கப்பூர் அரசு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழக கட்சிகளில் ஒன்றான பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கென பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட பின்பற்றாமல் சர்வாதிகாரமான முறையில் சிங்கப்பூர் அரசு நடந்திருக்கிறது.
இதற்காக, சிங்கப்பூர் அரசை இந்தியா கண்டிப்பதுடன், வெளியேற்றப்பட்ட 52 இந்தியர்களுக்கும், விபத்தில் கொல்லப்பட்ட சக்திவேல் குமாரவேலுவின் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் பேசுபவர்களையே தூதர்களாகவும், தூதரகப் பணியாளர்களாகவும் நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 Responses to சிங்கப்பூர் கலவரம் : இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டது தவறு : இழப்பீடு வேண்டும் : இராமதாஸ்