தேசிய அளவில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் கல்வித் தரமும் தேசிய அளவில் பாதிப்படைந்து உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற கல்வி மானிய குழுவின் வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், தேசிய அளவில் கல்வியின் தரம் தாழ்ந்து போவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்த கல்வித் தரம் தேசிய அளவில் பாதிப்படைந்து இருப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பது முக்கிய காரணம் என்றும், இந்தியாவின் கல்வித் தரம் குறைந்து உள்ளது என்பதற்கு,
உலக அளவிலான தரமான கல்லூரிகளில் இந்தியாவில் உள்ள எந்த யுனிவர் சிட்டியும் இடம் பிடிக்கவில்லை என்பதே முக்கிய சான்று என்றும் கூறியுள்ள பிரதமர், தேசிய அளவில் நிலவும் இந்த நிலை கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
0 Responses to தேசிய அளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை கல்வி தரத்தை பாதித்து உள்ளது: பிரதமர்