Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் கொழும்பில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் அரசாங்கத்தில் தமது செல்வாக்குக் குறைந்துள்ளமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, தமது கட்சியை கலைத்துவிட தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் கட்சியின் சில காரியாலயங்கள் மூடப்பட்டன.

இதேவேளை ஈ.பி.டி.யைக் கலைத்து விட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துக் கொள்வது தொடர்பிலும் தாம் ஆலோசித்;து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உறுதியான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஈ.பி.டி.பி விரைவில் கலைக்கப்படலாம் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com