இறுதி யுத்த காலப்பகுதியில் காணாமல் போன 11 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மேலும் ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பான முறைபாடுகளை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் ஆணைக்குழுவிடம் கிடைத்த முறைபாடுகளின் அடிப்படையில், 11 ஆயிரம் பேர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தொடர்பாக புதிய ஆணைக்குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, காணாமல் போனர்வகள் தொடர்பான முறைபாடுகளை பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கும்.
அதன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் நிறைவுறுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

0 Responses to காணாமல் போனோரைக் கண்டறிய மேலும் ஒரு ஆணைக்குழுவாம்??