Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபாகரனின் வீடு அவருடைய சகோதரியாரின் சீதன வீடு..

பிரபாகரனின் வீடுகள் இரண்டும் சிறீலங்கா அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட இருப்பதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் பிரபாகரனின் உறவினர் வல்வையில் உள்ள வீடு பிரபாகரனுக்கு சொந்தமான வீடல்ல என்று தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தின்படி பெற்றோரின் வீடு மகனுக்கு சேர்வதில்லை, அதன்படி மகளுக்கு சீதனமாக இது வழங்கப்பட்டது.

இதன்படி மேற்கண்ட வீடு பிரபாகரனின் தமிழகத்தில் இருக்கும் சகோதரியாருக்கே பெற்றோரால் வழங்கப்பட்டது, அவர்கள் அந்த வீட்டை இப்போது தமது மகளுக்கு வழங்கியுள்ளார்கள்.

தற்போது அந்தவீடு ஜேர்மனியில் வாழ்ந்துவரும் பிரபாகரனின் சகோதரியார் மகளுக்கே சொந்தமானதாகும்.

மேலும் பருத்தித்துறை காணிக்கந்தோரில் உள்ள உறுதியின் பிரகாரம் பிரபாகரனின் பெயரில் அந்த வீடு இல்லை.

பிரபாகரன் தனது இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்துள்ளார் என்பதைத் தவிர வேறு வகையில் அவருக்கு அந்த வீடு உரித்துடையதல்ல.

அப்படியிருக்க பிரபாகரன் பெயரில் அந்த வீட்டை எப்படி பொறுப்பேற்க முடியும்..?

ஆகவே பிரபாகரன் பெயரில் அந்த வீட்டை கைப்பற்ற முடியாதென்பது முக்கிய விடயமாக உள்ளது.

அதேவேளை வன்னியில் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரன் வீட்டின் உறுதியும் அவருடைய பெயரில்தானா இருக்கிறது என்பது முக்கிய கேள்வியாகும்.

விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசை ஏற்றுக்கொண்டு, சிறீலங்கா காணிக்கந்தோரில் பிரபாகரன் பெயரில் வன்னி வீட்டை பதிவு செய்திருக்கமாட்டார்கள் என்பதை சிறு குழந்தையாலும் உணர முடியும்.

ஆக, பிரபாகரன் வீடுகளை அரசுடமையாக்குதல் என்ற வாதம் சட்டப்படி சரியா..? என்ற கேள்வி எழுகிறது.

எப்படியோ பிரபாகரன் வீடுகளை கையகப்படுத்தல் விவகாரம் வல்வை வீட்டைப் பொறுத்தவரை மிகுந்த சட்டச்சிக்கல்களுக்குள் வரும் என்றே கருதப்படுகிறது.

மேலும் அடுத்தகட்ட போருக்கு பிரபாகரன் வருவார் என்று பழ. நெடுமாறன் சென்ற வாரம் அறிவித்திருப்பதால் அவரது கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதாவென அறிய அரசாங்கம் இப்படி நூல்விட்டுப் பார்க்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியது என்கிறார்கள் நோக்கர்கள்.

அலைகள்.

0 Responses to வல்வெட்டித்துறை வீடு சட்டப்படி தலைவர் பிரபாகரனுடையது அல்ல... || வாழ்ந்த வீடு சொந்த வீடக்குமா...?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com