Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரான்சில் ஸ்ராஸ்புர்க் நகரத்தில் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தால் கலைவிழாவாக சிறப்பாக செய்யப்பட்டது.

15.012.2013. ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும், தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும், தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர்.

மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு பாரிஸ் தமிழ்ச்சோலை மாணவிகள் மற்றும், ஸ்ராஸ்பூர்க் மாணவ மாணவிகள் நடனம் வழங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மூத்த பாடற்கலைஞர்களின் தாயக விடுதலைப்பாடல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய சமுதாய மாற்றத்தில் பெண்களின் வாழ்க்கை சவாலா, சாத்தியமா என்கின்ற தலைப்பில் விவாத மேடை  நடைபெற்றது. இதில் பங்கு பற்றிய பெண்கள் மிகவும் அழகாகவும், நகச்சுவையாகவும்,அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழீழப்பெண்கள் தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டியிருந்தார்கள் என்பதோடு அனைவரின் விவாதங்களிலும் தமிழீழப்பெண்கள் உயர்வாகவும் சாதனைப் பெண்களாகவுமே  பார்க்கப்பட்டமை சிறப்புக்குரியதாகும்.  மற்றும்  சிறப்பு அம்சமாக அங்கு வாழ் இளையோர் ஒன்றுதிரட்டி ஒருமைப்படுத்தி அவர்கள் மூலமாக அடங்காப்பற்று மண்ணை இறுதியாக ஆண்ட வீரமன்னர்  பண்டாரவன்னியன் நாடகம்'' மேடையேறியது அதில் பாத்திரமேற்ற இளையோர்கள்  அவற்றை உணர்ந்து மனனம் செய்து ஒப்புவித்ததோடு மட்டுமல்லாது கூச்சம் எதுவுமின்றி நடித்துக்காட்டியிருந்தமை பாராட்டிற்குரியது.

அந்த மாவீரனின் வீரத்தையும், அவனுக்கெதிராக நடந்த துரோகத்தையும் அந்த காலத்தை இன்று கண்முன்னே கொண்டு வந்து மண்டபத்தில் இருந்த மக்களை தமது நடிப்பால் சில மண்pநேரம் கட்டிப்போட்டு வைத்தார்கள். முடிவுpல்; எந்த அடக்கு முறையாளனாலும் தமிழனை அடக்கி விடமுடியாது என்கின்ற தொரு செய்தியை மக்களின் பலத்தகூக்குரலுக்கும் கைதட்டலுக்கு மத்தியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நாடகத்தை உருவாக்கியவரும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினரும் மேடையில் வைத்து பாராட்டப்பட்டனர். ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன், என்னோடு ஆடவா  என்ற எழுச்சிப்பாடல்களுக்கும் பாரிசில் இருந்து சென்ற மாணவியர் நடனம் வழங்கி பலத்த பாராட்டுதல்களை பெற்றிருந்தனர்.

   ஒட்டு மொத்தமாக  நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் தாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கரோ இசைமூலம் தத்துவுப்பாடல்கள், சிறியோர் பெரியோர் அழகாக பாடியிருந்தனர். மமிகிரி மூலம் பல்சுவை நிகழ்வும் இடம் பெற்றது. இவ்வாறு பிரான்சு மற்றும் சவிஸ, Nஐர்மனி போன்ற நாடுகளிலும் இருந்த மக்களும் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளையும், ஒத்துழைப்பையும் இந்த நல்ல நோக்கத்திற்காக தந்திருந்தனர். அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல் குறித்த நேரத்தில் சரியாக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தால்  முழுமையான நிகழ்வுகளையும் முழு மக்களும் பார்த்திருக்க முடிந்திருக்கும்.

இனிவரும் காலங்களில்  நிகழ்வுக்கான நாட்களையும், நேரத்தையும் கவனத்தில் ஏற்பாட்டாளர்கள் எடுக்க வேண்டும். அதே போலவே குறித்த நேரத்தில் நிகழ்வுகளை ஆரம்பிக்க  முழுமையாக மக்கள்pன் வருகை இருக்க வேண்டும் என்பது அங்கு வந்திருந்த பலபேரின் ஆதங்கமாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு நிறைவான தாயக உணவான எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஒளியை ஐரோப்பிய நாடுகளில் ஓர் முக்கிய இடமாக கருதப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வுகள் யாவும் இரவு 9.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

0 Responses to தாயகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரான்சில் கலைவிழாவாக சிறப்பாக செய்யப்பட்டது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com