Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரம் அவகாசம் கேட்டுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நாளையோடு ஆட்சி காலம்  முடிவடைகிற நிலையில், உடனடியாக டெல்லி சட்டப்பேரவைக்கு ஆட்சி அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 32 இடங்களை கைப்பற்றிய பாஜகவும் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது, 28 இடங்களை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் 8 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதோடு, ஆம் ஆத்மி கட்சியில் 18 நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை ஆம் ஆத்மி கட்சி தன்னிச்சையாக நிறைவேற்றி கொள்ளலாம் என்றும் சுதந்திரம் அளிக்க முன்வந்து உள்ளது.

இந்நிலையில் ஆம ஆத்மி கட்சியின் செயற் குழுக் கூட்டம்  கெஜ்ரிவால் தலைமையில் இன்று கூடுகிறது. துணை ஆளுநரிடம் 48 மணி நேரம் அவகாசம் கேட்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால்,காங்கிரஸ் கட்சி தரும் அதரவு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இன்னும் 48 மணி நேரத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமையுமா அல்லது பாஜக ஆட்சி அமையுமா, அல்லது குடியரசுத் தலைவர்தான் ஆட்சி செய்வாரா என்பது தெரிய வரும்.

0 Responses to டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com