யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் மாணவர்களிடம் காணப்படும் கல்வி மற்றும் சுதந்திரத்தின் மீதான பற்றை அழித்து, புலன் இன்பங்களின் பக்கம் திருப்பும் முறையற்ற செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, முன்னர் எப்போதுமே இல்லாத அளவுக்கு யாழ்ப்பாணத்து இளைஞர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரே அது அதிகரித்துள்ளது. யார் யார் வந்து இந்தப் பழக்கத்தினை அறிமுகப்படுத்தினர் என்று ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. ஆனாலும், சகலதும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போதே நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
எமது உரிமைகளை அடைய வேண்டியது அவசியம். ஆனால், இலட்சியம் தான் முக்கியம் என்று யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் விடுவதில் பயனில்லை. மாறாக யாதார்த்தத்தை உணர்ந்து இலட்சியத்தை அடையும் வழியை சரி செய்வதே புத்திசாலித்தனமானது என்று அவர் கூறியுள்ளார்.
எமது மாணவ சமூகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபடுகின்றனர். கல்வியை மழுங்கடித்து போதையின் பக்கம் திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, மாணவர் சமுதாயம் இவற்றை தவிர்த்து கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபாட்டைக் காட்ட வேண்டியது அவசியமாகும். அதுவே, எமது முன்னேற்றத்திற்கு உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கில் மாணவர்களின் கல்வியை அழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுகிறது : சி.வி.விக்னேஸ்வரன்