இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவித்தால், அதே நாளில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று ஞான தேசிகன் கூறியுள்ளார்.
தமிழக நாகை மீனவர்கள் 150 பேர் மற்றும் அவர்கள் படகுகளை சிறைப் பிடித்த போது, நேரடியாக தாம் இலங்கை அரசுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் தங்களது நாட்டு மீனவர்கள் 170 பேர் மற்றும் அவர்களது 31 படகுகளை தமிழக, ஆந்திர அரசுகள் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்ததாக ஞான தேசிகன் கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் தங்களது நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் ஒப்படைத்தால், அதே நாளில் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை அரசு விடுவித்து விடும் என்று ஞானதேசிகன் கூறியுள்ளார். அதோடு இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை தீரவேண்டும் என்றால், தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஒருநாள் குறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்த இலங்கை அரசின் முடிவை தாம் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் தெரிவித்து உள்ளதாகவும் ஞான தேசிகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவித்தால் தமிழக மீனவர்கள் விடுவிப்பு?