பதுக்கல்களை கண்டுபிடித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மாநில அரசுகளில் நடக்கும் பதுக்கல் கொள்ளைகளை மாநில அரசுகள் கண்டு பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளாததால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலங்களில் நடக்கும் பதுக்கல்களை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் நடவடிக்கை எடுக்கும் சட்ட முறை அமலில் உள்ளது.
இருப்பினும் மாநில அரசுகள் இதைக் கண்டுபிடித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இதனால்தான் நாட்டில் பண வீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இனியாவது மாநில அரசுகள் பதுக்கல் காரர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ப.சிதம்பரம்,
மத்திய அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
0 Responses to பதுக்கல்களை கண்டு பிடித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்