Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நீதிபதி ஒரு பெண் நீதிபதி நியமிக்கப் பட்டு உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவிகள் காலியாக இருப்பதாகவும், விரைவில் இதற்கு காலியாக உள்ள இடங்களுக்கு நீதிபதிகள் நியமனம்  நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக செல்வி வேலுமணி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக பெண் நீதிபதி நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com