Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரணைமடு குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வது உள்ளிட்ட சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக இரணைமடு குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வது தொடர்பாக கட்சியினில் பிளவு பட்டு இருதரப்புக்கள் நீண்ட நேரம் வாதாடியதுடன் விவசாய அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு குத்துவெட்டுக்களின் மத்தியினில் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இன்று ஒன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கூட்டமைப்பின் கூட்டத்தினில் காரசாரம்!! வவுனியாவினில் தொடர்கின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com