Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது விசாரணையின் போது வலம்புரிப்பத்திரிகையாளர் உதயராசா சாளின் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் அலுவலகைச் செய்தியாளர் உதயராசா சாளின் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த இரு தினங்களாக் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறையிடப்பட்டதனையடுத்தே இவ்விசாரிணை இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்ற விசாரணைகளின்; போது யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு பயங்கரவாதத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகின்றீர்கள்.நீங்கள் புலிகளிற்கு ஆதரவானவரா? என அவரை மிரட்டியுள்ளனர்.குறித்த விசாரணை இரு நாட்கள் நீடித்ததுடன் சிங்களத்தினில் எழுதப்பட்ட வாக்குமூலமொன்றினில் அவர் மிரட்டி ஒப்பமிட வைக்கப்பட்டுள்ளார்.

ரி.ஐ.டியினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சாளின் ஏற்கனவே பல தடவை இராணுவத்தினரின் கொலை முயற்சித்தாக்குதலுக்கு உள்ளானதோடு தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

0 Responses to தொடரும் அடக்குமுறை! வலம்புரிப்பத்திரிகையாளர் சாளின் விசாரணையின் போது தாக்கப்பட்டுள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com