Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புது வருடத்தின் ஆரம்பத்திலேயே இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மகிந்த அரசாங்கம் புதிய வரி சீர்த்திருத்ங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற அரசி, மா, பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்துடன் சமயல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை புதிய வரி சீரமப்பின்படி, தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதும், மறைமுகமாக பல வரிகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதுவருட ஆரம்பத்திலேயே அத்தியாவசியப் பொருட்டகளின் விலைகள் அதிகரிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com