மனித உரிமைகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு நீதித்துறை யின் சுயாதீனம் கேள்விக் குறியாக் கப்பட்டுள்ள ஸ்ரீலங்;காவில் சர்வ தேசநாடுகளின் தலையீடுகள் தேவை என்பதையும், அப்பாவித்த னமாக கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களின் உயிரிழப்புகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை யிலான இந்த அரசு பதில் கூறியாக வேண்டும் என்றகோரிக்கை வலுப் பெற்றுவரும் நிலையில் சர்வதேசத் தின் முன் மீண்டும் ஒருமுறை உறவு களை மீட்கும் போராட்டத்தை காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தமையும், அதை சர்வதேசத்தின் கண்ணில் படவிடாது இராஜபக்ஷ அரசினை பாதுகாக்க முற்பட்ட சம்ந்தன் தலைமை மக்களை எதிர்கொள்ளப் பயந்து தப்பித்து ஓடியமையும் நடந்துமுடிந்த சம்பவமாக பதியப்பட்டுவிட்டது.
ஆயுதப்போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டதாக அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. இருப்பினும் இன்னும் வடக்கில் ஆயுதம் ஏந்தாத போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. வறுமையும், உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களின் துன்பமும் தீராத் துன்பமாக மாறிவருகின்றது. இறுதியுத்தத்தின் போது இராணுவத் தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்றுவரை உறுதிப்படுத்தப்பட முடியாதநிலையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் காரணமாகவும,; ஆதரவற்றநிலைகாரணமாகவும் பலநூற்றுக்கணக்கான காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவினர்களைத் வெளிப்படை யாகத்தேடும் பணியைதொடர அஞ்சுகின்றனர்.
இந்தியா இலங்கை உட்பட இந்த உலகத்தின் அரைவாசிக்கும் சற்றுக் குறைவானளவு நாடுகளைகைப்பற்றி நூற்றாண்டிற்கு மேலாக தன்வசம் வைத்திருந்த இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைவரலாற்றில் சுமார் 40 வருடங்களுக்குபின்பு மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்குகடந்த 15 ஆம் திகதி வருகைதந்திருந்தார். அவரது கவனத்தை ஈர்த்து தமது உறவினர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மேற்படி போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கொழும்பில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாடிற்கு வருகை தந்த இங்கிலாந்துப் பிரதமர் ஸ்ரீலங்கா அரசிற்கு சிம்மசொப்பன மாக விளங்கியதோடு சனல் - 4 தொலைக் காட்சி உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஊடகங்களையும் தன்னுடன் அழைத்துவந்து சிங்களத் தலைவர்களை கதிகலங்க வைத்துவிட்டார்.
போரில் வெற்றிபெற்ற மமதையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தமிழர்களை ஒருபொருட்டாக கருதவில்லை என்பதை நேரில் அறிந்திருப்பார் பிரதமர் டேவிட் கமரூன். அவர் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்ககாலம் எடுத்தாலும் சனல்-4 தொலைக்காட்சி நிருபர்களின் மூலம் ஸ்ரீலங்காஅரசாங்கத்;திற்கு அழுத்தம் கொடுக்க எப்பொழுதோஆரம்பித்துவிட்டது மேற்குலகு. பிரதமர் டேவிட் கமரூனின் வருகையை முன்னிட்டு நூலகத்திற்குஅருகில் நடைபெற்றகாணாமல் போனவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்புபோராட்டம் சனல்-4 தொலைக்காட்சி உட்பட வந்திருந்த அனைத்து சர்வதேச ஊகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்ததுமட்டுமன்றி அந்த ஊடகவியலாளர்கள் அந்தநிகழ்வை உலகிற்குவெளிப்படுத்தியவிதம் சர்வதேசத்தையும் கண்கலங்கவைத் திருந்தது.
ஆனாலும் ஐயோ எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று கதறும் உறவுகளின் கண்ணீர்க்கதைகளை அவர்களுடன் கூட நின்று டேவிட்கமரனுக்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டிய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மாவிட்டபுரத்தில் சர்வதேச ஊடகங்களின் கண்க ளிலோஅன்றி பிரதமரின் கண்க ளிலோபடாதவகையில் ஒழிந்து கொண்டனர்.
அதன் மூலம் ராஜபக்சே அரசை சர்வதேச நெருக்கடி ஒன்றிலிருந் துகாப்பாற்ற அவர்கள் முயன்றிருந் தாலும் அவர்களையும் மீறி காணாமல் போனஉறவுகள் நடாத்திய போராட்டம் ராஜபக்சேஅரசின் கொடூரமுகத்தை சர்வதேசஅரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது. கூட்ட மைப்பினரூடாக ராஜபக்சே சாதிக்கநினைத்ததை தவிடு பொடி யாக்கியுள்ளது.
தாயகத்தில் எமது உறவுகள் சிறீலங்காஅரசினால் கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள் என்றுபுலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கூறுவதும் யாழ்ப்பாணம் உள்ளிட்டதமிழர் தாயகத்தில் நடப்பதும் ஒன்றுதான் என்பதனை வெறும் 400 பேர் நடாத்திய போராட்டம் உலகுக்கு வெளிப் படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டமும் அதற்கு சர்வதேச ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் இலங்கைஅரசு பதில் சொல்லவேண்டியநிலையை உருவாக்கும் என்றநம்பிக்கையை ஓரளவுக்கேனும் ஏற்படுத்தியுள்ளது.
கரிகாலன்.

0 Responses to என் தமிழ்தேசத்தில் அழுகுரல் ஓயாதோ? - கரிகாலன்