Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒருத்தருக்கும் சொல்லாதைங்கோ...

பதிந்தவர்: தம்பியன் 07 December 2013

கூத்தமைப்பு தலைவருக்கு பொது நூலக வாசலில் நடந்த அர்ச்சினையால பலரும் கலங்கிப்போயி இருக்கினமாம். அப்படி பின் கதவால தப்பியிட்ட மெண்டு விக்கியரும் , பின்கதவு எம்பியும் பெருமூச்சோட சொன்னவையாம். ஓமய்யா சனம் கிளர்ந்தெழுந்தால் உங்கட போலிமுகங்கள் கிழிச்சு தொங்குற நாள் ரொம்ப காலத்திற்கு இல்லை.

கூத்தமைப்பு கிளி எம்பிக்கு இப்ப இரவு பகலா ஒரே பேதியாம் பாருங்கோ. தமிழரசு தலைமை அடுத்து தன்ர கையில தான் வந்து விழுமெண்டு மனுசன் நீண்டகால குறுங்கால திட்டங்கள் வகுத்து இருந்தது. அதக்குள்  பின் கதவு எம்பி ,விக்கியரென பலரும் வந்து குதிக்க எல்லாம் கேள்விக்குறியாகிப் போயிட்டுது. அந்த கடுப்பில இருக்க இப்ப உள்ளுரிலேயே கதிரையாட்டம் காணத்தொடங்கியிட்டு. அதுக்காக அந்த வீரத்திருமகளுக்கு சேறு அடிக்கிறதில ஆள் முழுமூச்சோட நிக்கிதாம். சனம் அவரைத்தான் இப்ப அருவருப்போட பாக்குதெண்டது புரிஞ்சா சரி.
சொல்லச்சொல்ல கேளாமல் சனத்தையும் உசுப்பேத்தி கைப்பற்றின வடக்கு மாகாணசபையின்ர அதிகாரம் வெறும் பேப்பரிலதான் கிடக்கெண்று முதலமைச்சர் விக்கியர் போறவாற இடமெல்லாம் புறுபுறுத்துக்கொண்டு திரியிறார். வேலியால போற ஓணானை மடியுக்குள்ள பிடிச்சு விட்டுட்டு குத்துது, குடையுதெண்டு கத்தி என்ன பயன் பாருங்கோ.

வலிவடக்கு காணியெல்லாம் சுவீகரிச்சாச்சு. அதைப்பற்றி கதைத்து இனி பிரயோசனம் இல்லையெண்டு மேன்மைதங்கிய ஐனாதிபதி சொல்லிப்போட்டாராம்.சனம் குழம்புது ஐயா என்று சம்பந்தர் சொல்ல ஆ.....சரியெண்டு மனுசன் போனைவைச்சிட்டுதாம். ஆனால் அடுத்த நாள் பேப்பரில சம்பந்தன் சொல்லி சனாதிபதி  எங்கட செய்தி வாசித்திருப்பார் தானே கூத்தமைப்புக்குள் மூவர் அணிக்கு எதிராக ஐனநாயக அணி ஒன்று செயற்படத் தொடங்கியிருக்காம்.அந்தக் குழுக்காரர் பல்வேறு தரப்புக்களிடமும் ஆதரவு கேட்டு கைநீட்ட தொடங்கியிருக்கினமாம். உன்னதமான சரியான பாதையில ஆர் போனாலும் சனம் பின்னால வரும் பாருங்கோ.

நன்றி - நம்தேசம்

0 Responses to ஒருத்தருக்கும் சொல்லாதைங்கோ...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com