Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அமெரிக்காவின் 2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடும் என அமெரிக்காவின் மிக முக்கிய செனட்டர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியின் டாவிட் விட்டர் எதிர்வு கூறியுள்ளார்.

''ஜிண்டால் போட்டியிடக் கூடும். ஏனெனில் ஒருவர் கவனித்தக்கத்தக்க ஒரு போட்டியாளர். அவருடைய தலைமைத்துவத்தை நான் மதிக்கிறேன். அவருடைய அரசியல் மதிப்பிற்கும் நான் மரியாதை கொடுக்கிறேன். ஆனால் என்னால் இதற்கு தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும், அல்லது அவருக்கு எவ்வகையில் உதவ முடியும் என நான் இன்னமும் சிந்திக்கவில்லை.  2016 தேர்தல் குறித்து இவ்வேளை ஒவ்வொருவரும் கவனம் செலுத்துவது இயல்பானது தான்'' என டாவிட் விட்டர் தெரிவித்துள்ளார். தற்சமயம் அமெரிக்காவின் லூயிசியானா மாநில ஆளுனராக இரண்டாவது தடவையாக பதவி வகித்து வரும் ஜிண்டாலின் பதவிக் காலம் 2015 இல் முடிவடைகிறது. அவர் மூன்றாவது தடவையாக இப்பதவிக்கு போட்டியிட முடியாது.

இதனால் லூயிசினாவின் புதிய மாநில ஆளுனர் பதவிக்கு டாவிட் விட்டர் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாபி ஜிண்டால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் உறுதியாக தெரிந்துவிடும் என டாவிட் விட்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸ் சார்பில் அமெரிக்க முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அதிபர் பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்வுகூறல்கள் அதிகரித்துள்ளன. பாபி ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜீண்டால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com