இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, அழுத்தம் கொடுக்கப்படும் என்ற
தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஜெனீவாவுக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், இராணுவ அடக்குமுறைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை மேற்கொள்வதாக கூறி, அரசாங்கம் சர்வதேச நாடுகளை ஏமாற்றி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஜெனீவா மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பும் பங்கேற்கும்! சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் - சுரேஸ் பிறேமச்சந்திரன்