இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்றை
நடத்துவது தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழக அமைச்சர்கள்
மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரச செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, தமிழக மீன்பிடி அமைச்சு, மீன்பிடி திணைக்களம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது அடுத்து வருடம் இரண்டாம் வாரமளவில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மாதம் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவது தொடர்பில் ஜெயலலித்தா கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இதில் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழக அரசாங்கம் மத்தியஸ்த்தம் வகிக்கும் என்றும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை குறித்து ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!