Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெடுந்திவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின்(ரஜீவ) படுகொலைச்சம்பவம் தொடர்பினில் கைதான வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,  றெக்சியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரும் யாழ.சிறையினில் இன்று அடைக்கப்பட்டுள்ளனர்.முன்னதாக இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றினில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டிருந்தார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்சியனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.கைதான மூவரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


0 Responses to ஈபிடிபி முக்கியஸ்தர் படுகொலை விவகாரம்! கைதான மூவரும் சிறையிலடைப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com