Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழில் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, ஆட்கடத்தல் கப்பம் கோரல் மற்றும் கொள்ளைச்சம்பவங்களுடன் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிக்கும் தொடர்புகள் உள்ளதாவெனும் பாணியினில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. மேற்படி விசாரணைகளை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும், விசேட குற்றப் புலனாய்வுப் பரிவு பொலிஸாரும் ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யுத்தத்திற்கு முன்னரும் சரி, யுத்தம் முடிவடைந்த பின்னரும் யாழ்.மாவட்டத்தில் ஆயுதங்களின் முனையில் பல்வேறுபட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கிதாரிகள் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறாததால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்று பொலிஸ் தரப்பினரால் கூறப்பட்டு வந்தது. நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் யாழ்.நகரில் உள்ள கடையில் வைத்து கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தர்ப்பத்திலும் ஈழமக்ககள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுதங்கள் அக்கட்சியினரிடம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. எனவே கடந்த காலங்களில் ஆயுதமுனையில் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் அவர்களும் தொடர்பு பட்டிருக்கின்றார்களா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் கொலை சம்மந்தமான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தற்போது அவ்விசாரணைகளை பயங்கரவாத குற்றத்தடுப்புப்பொலிஸாரும், விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸாரும்மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் ஆயுத முனைகளில் கொலை, கொள்ளை கப்பம் கோரல் மற்றும் ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான தகவல்களை அப்போது தெரிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அக்குற்றங்கள் தொடர்பாக யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. ஆனாலும் புலனாய்வு ரீதியில் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  ஆயுதம் வைத்திருந்த நிலையில் யாழ்.நகர்ப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் தற்போது பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அது போல் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தரப்பினரிடம் ஆயுதங்கள் இருப்பது தௌ;ளத்தெளிவாகத்தெரியவந்துள்ளது. எனவே கடந்த காலங்களில் யாழில் ஆயுத முனையில் நடைபெற்ற கொள்ளை, கொலை கப்பம் கோரல் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பாக குறித்தத கட்சிக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்விசாரணைகளை பயங்கரவாதக்குற்றத்தடுப்பு பொலிஸாரும், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

0 Responses to ஈபிடிபிக்கு ஆப்பு தயார்! கடந்த கால குற்றச்செயல்களிற்கும் விசாரணையாம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com