Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வெள்ளி கிழமை பிரித்தானியா எதிர் கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர் சந்தித்து எதிர் வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும்  இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய மகாநாடு (CHOGM) தொடர்பாகவும், தொடர்ச்சியாக இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப் பட்டது.

இந்த சந்திப்பில் எட் மிலபான்ட் கூறுகையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரனைக்கு மார்ச் மாதம் வரை உலக நாடுகள் பொறுமை காக்க கூடாது எனவும், போர் குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் CHOGM மகாநாடு நடைபெற்றது மிகவும் கவலைக்குரியது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், இலங்கையில் தமிழ் மக்கள் மீது தடத்தப்பட்ட போர்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வரும் வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும் கூறினார்.

சம காலத்தில் பிரித்தானியா பேரவையின் உறுப்பினர்கள் ரோதார்ஹம் தொழில் கட்சி  பாராளுமன்ற உறுப்பினர் சாரா செம்பியன் (Saara Champian) அவர்களையும் சந்தித்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் இனபடுகொலை பற்றி கலந்துரையாடினார்கள். இவரும் தம்ழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பில் (APPGT) தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி இலங்கையில் நடை பெற்ற கம்மென் வெல்த் மகாநாட்டில் பல சர்வதேச ஊடகங்கள் பங்கு பற்றியதும் இவ் ஊடகங்களில் பல, தமிழ் மக்கலுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திற்கு எடுத்து கூறியதும்  யாவரும் அறிந்தது. மேலும் . அதன் பின் அவர்களை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தி வருதல், மற்றும் வெள்ளை van கடத்தல் சம்மந்தமாகவும் கலந்துரையாடப் பட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்குத் தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.

0 Responses to பிரித்தானியா தமிழர் பேரவை பிரித்தானியா எதிர் கட்சி தலைவர் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com