தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் நீரின்றி அமையாது நில வளம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ் வார், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தொடர்பாக விளார் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த நோட்டீசை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன் அறிப்பு இன்றி நோட்டீஸ் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது என உயர் நீதி மன்றம் அறிவித் துள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம்.
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் சட்டத்தை மீறி கட்டிடம் கட்டப்படவில்லை. சட்டப்படிதான் கட்டி உள்ளோம். எங்களது சொந்த இடத்தில் தான் கட்டி உள்ளோம். இது தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.
முள்ளி வாய்க்கால் எதிரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அரசுஅனுமதி பெற்று தான் பூங்கா அமைத்துள் ளோம். அதனை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று அரசு கூறி வருகிறது.இது தொடர்பான வழக்கு வருகிற 2–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம்.
முற்றம் காப்போம் ரெயில் பயண நிகழ்ச்சி ஜனவரி 4, 5 –ந் தேதிகளில் நடக்கிறது. 4–ந் தேதி சென்னையில் இருந்து சேலம் வரையிலும், 5–ந் தேதி ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை வழியாக சென்னைக்கும் ரெயில் பயணம் நடைபெறுகிறது’’என்று கூறினார்.
0 Responses to முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்: பழ.நெடுமாறன்