Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் ஆளும்  மாநிலங்களை மட்டுமே கவனிப்பதை விடுத்து, மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் ஊடகங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடித்தான் வருகிறது என்றும், காங்கிரஸ் ஆளும்  மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நற்பெயர்களை அறிந்தால் உங்களுக்குப் புரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் அந்த மாநிலத்தின் ஆட்சிக்கு கிடைத்துள்ள நற்பெயர், வளர்ச்சித் திட்டங்கள் என்று அனைத்தையும் ஊடங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் ஊழலுக்கு எதிரான ஆட்சி எது என்பது மக்களுக்கு புரிய வரும் என்றும்,

வரவிருக்கும் சவாலான நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என்றும் சோனியாகாந்தி கூறியுள்ளார்.

0 Responses to மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் ஊடகங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்:சோனியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com