அண்மையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக
தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற அங்கத்தவரும்,
வெளிநாட்டுறவு, பாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும்,
ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின்
அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற்
போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப் போராளிகள், அரசியல்
கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது
கட்டவிழ்த்துப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம்
ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார்.
வடமாகாண ஆளுநரான முன்னைநாள் சிறீலங்கா இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினார்.
வடமாகாண ஆளுநரான முன்னைநாள் சிறீலங்கா இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினார்.
Ananthi, keep it up. Worst time for SL will start from April 2014.