அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை மண்ணின் மடியில் முடிந்ததம்மா..
கடந்த டிசம்பர் 5ம் திகதி மரணமடைந்த தென்னாபிரிக்காவின் கறுப்பின முதலாவது அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடலம் இன்று ஞாயிறு அவர் பிறந்த கிராமமான கூனூவில் சகல அரச மரியாதைகளுடனும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கிராமத்திலிருந்து கடந்த 95 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட இந்த மனிதன் இன்று அதே மண்ணில் அடங்கி தனது பயணத்தை முடித்துக் கொள்கிறான் என்று தென்னாபிரிக்க அதிபர் ஜாக்கப் சூமா தெரிவித்து அவருக்கு இறுதி விடை கொடுத்தார்.
அத்தருணம் மூன்று உலங்குவானூர்திகள் தென்னாபிரிக்கக் கொடியுடன் பறந்து கொண்டிருந்தன, ஆறு ஜெட் விமானங்கள் வானில் பறந்து மரியாதை செலுத்தின, தரையில் இருந்து 21 பீரங்கி வெடிகள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை வெறும் தேர்வு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 4500 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், அதைத் தொடர்ந்து இறுதிக்கிரியையின் கடைசிக்கட்டத்தில் 450 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.
சுமார் நான்கு மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்று மண்டேலாவின் உடலம் மனிதர்களிடமிருந்து விடைபெற்றது.
இந்த நிகழ்வில் அவரோடு றொபின் தீவு சிறையில் இருந்தவரும், குடும்ப நண்பருமான அகமட் முகமட் கற்றாடா முக்கிய இரங்கல் உரையை நிகழ்த்தினார்.
அவரை தான் 67 வருடங்களுக்கு முன் சிறைச்சாலையில் சந்தித்ததாகவும், உறுதியும், திடகாத்திரமும் கொண்ட குத்துச்சண்டை வீரரான அவரை பின்னர் எதுவும் இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டதாகவும், இன்று தனது இனிய நண்பரை இழந்து நிற்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தான் அழைக்கப்படவில்லை என்றும், தனது நண்பரின் இறுதிக்கிரியையில் வேண்டுமென்றே தன்னைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று நேற்று சனிக்கிழமை ஆர்க் பிஷப் டெஸ்மன் ரூட்டு தெரிவித்திருந்தார்.
இன்று அவருக்கும் பங்கேற்க அனுமதி கிடைத்திருந்ததால் அவரும் வருகை தந்திருந்தார்.
ஆர்க் பிஷப் டெஸ்மன் ரூட்டு கடந்த 2010 லேயே ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட, அவர் கௌரவ உயர் மதத்தலைவராக இன்னமும் பணியாற்றி வருகிறார்.
தற்போதைய ஏ.என்.சி மீது அவர் மோசமான விமர்சனங்களை வைத்த காரணத்தினால் அவரை இப்போதைய தலைவர் காய்வெட்டினார் என்றே கருதப்படுகிறது.
இன்றய ஏ.என்.சி நெல்சன் மண்டேலா காலத்து கட்சியல்ல மிக மோசமான ஊழல் மிக்க தாபனம், ஆட்சி நடாத்துவதற்கு அது லாயக்கற்ற கட்சி என்றும் நான் அடுத்த தேர்தலில் இந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும் டெஸ்மன் ரூட்டு கடும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
மேலும் மண்டேலாவின் உடலத்தை எங்கே அடக்கம் செய்வது என்ற சர்ச்சையில் அவருடைய குடும்பத்தினர் தமக்குள் மோதிக்கொண்டு நீதிமன்று சென்றபோது, ஒரு விடுதலை வீரருடைய வாழ்வுக்குள் குடும்பம் என்ற பெயரில் தேவையற்று நுழைந்து அவருடைய வாழ்வையும், வரலாற்றையும் அசிங்கப்படுத்தாதீர்கள் என்றும் கூறியிருந்தார்.
இதனால் பொறுப்பற்ற மண்டேலா குடும்பத்தினர் பலருக்கு அவர் போட்ட சாட்டையடி அவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது.
நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரும், உலகத்தால் நன்கு அறியப்பட்டவருமான ஆர்க் பிஷப் டெஸ்மன் ரூட்டு சொன்ன கருத்துக்கள் ஏ.என்.சிக்கு பலத்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஏ.என்.சியிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கறுப்பின போராட்டங்கள் இப்போது பல இடங்களிலும் அரங்கேறியுள்ளன, அதற்கு வலுக்கொடுக்கின்றன டெஸ்மன் ரூட்டுவின் கருத்துக்கள்.
இப்போதைய அதிபரின் வீட்டுத்தொகுதி ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் யாவும் பாரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது, மண்டேலாவிற்குப் பின்னர் இது எரிமலையாக வெடிக்கப்போகிறது என்ற அச்சம் வாட்டத் தொடங்கிவிட்டது.
இப்பொழுதே விடுதலைத் தாபனமான ஏ.என்.சியின் முன்னணி உறுப்பினர்கள் கொழுத்து பணக்கார முதலைகளாகிவிட்டனர், ஏறத்தாழ விடுதலையை ஏப்பம் விட்டுவிட்ட முதலைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற உண்மைத் தொண்டர்கள் போராடுகிறார்கள்.
இந்த சூடான தருணமே ஏ.என்.சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் அதிகாரத்தைப் பிடிக்க பொருத்தமாக தருணம் என்பதால் பெரும் குத்து வெட்டுக்கள் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏ.என்.சியால் நடாத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் பேசிய அதிபர் ஜாக்கப்சூமா மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா, அவருடைய விதவை மனைவி கறாக்கா மிச்சேல் ஆகியோருடைய பெயர்களை உச்சரித்துள்ளார்.
மிகப்பெரிய ஊழல் பேர்வழி என்று அடையாளம் காணப்பட்டு, அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மண்டேலாவின் முன்னாள் மனைவியை அவர் மறுபடியும் பெயர் குறிப்பட்டமை மண்டேலா குடும்பத்தை கைக்குள் வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
மேலை நாட்டு ஆய்வாளர்கள் அவருடைய நகர்வு ஆச்சரியம் தருவதாகவே தெரிவிக்கிறார்கள், ஆனால் குறைந்தளவு நபர்களுக்குள் நடந்த இறுதி நிகழ்வு அங்குள்ள பதவிப்போட்டியின் அடையாளம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் அவருடைய இறுதிச்சடங்கை அரசியல் ஆக்கக்கூடாது என்பதற்காகவே குடும்ப உறுப்பினர்களுடன் கடைசி நிகழ்வு நடைபெறுவதாகவும் வேறு சிலர் கூறுகிறார்கள்.
மேலும் மண்டேலா என்ற விடுதலை வீரனின் இறுதி நிகழ்வை மக்களோடு சேர்ந்து நடாத்தாமல் குறிக்கப்பட்ட ஒரு சிலரோடு நடாத்தி முடித்துள்ளமை அவருடைய விடுதலை போராட்டத்திற்கு ஒரு சிலரே உரிமை கோருவதுபோலவும் இருந்தது.
கூனூ கிராமத்தில் வெள்ளை நிறமான ஒரு கூடாரம் அமைத்து நடந்த இறுதிக்கிரியைகளை படம் பிடிக்க தென்னாபிரிக்க தொலைக்காட்சி ஒன்றைத்தவிர மற்றவர்களை அனுமதிக்கவும் இல்லை.
இதற்கு முன்னர் பிறிற்ரோரியாவில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தபோது சுமார் ஓர் இலட்சம்பேர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
அவருடைய இறுதி விடைபெறும் பொழுது இப்படி மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு நடைபெறுவது தமக்கு கவலை தருவதாக பெருந்தொகையானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் இளவரசர் சாள்ஸ், நோர்வே முன்னாள் பிரதமர் ஜென்ஸ் ஸ்ரோல்ரன்பியா, ஒபரா வின்னின்பெரி போன்றோர் வருகை தந்திருந்தார்கள்.
மண்டேலாவிற்கு பிந்திய தென்னாபிரிக்கா மறுபடியும் ஆரம்பப்புள்ளிக்கு போகுமா முன்னேறுமா என்பதை வரும் நாட்கள் தெளிவுபடுத்தும்.
அலைகள்.

0 Responses to அதிருப்திகளுடன் முடிவடைந்த மண்டேலாவின் அடக்கம்...