Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆழிப்பேரலை இடர்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்கள்; அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.அதே வேளை வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவினில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வடமராட்சி கிழக்கினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் ஏற்பாட்டினில் மணற்காடுஇகட்டைக்காடு மற்றும் உடுத்துறைப்பகுதிகளினில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சக மாகாணசபை உறுப்பினர்கள் இந்நிகழ்வினில் பொதுமக்களுடன் கலந்து கொண்டனர்.


இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தாக்கிய பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்புத் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற பகுதிகளில் இந்த நிகழ்வு உணர்வுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் கல்லறைகள், நினைவிடங்கள் என்பவற்றின் அவர்களின் உறவுகள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை, யாழ்.மாவட்ட தேசிய பாதுகாப்புத்தின நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இன்று இடம்பெறும் இந்த நிகழ்வில் இடர்முகாமைத்துவ திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராமசேவையாளர்களுக்கான மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்திய போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. நீண்டதொரு இடைவெளியின் பின்னர் மக்கள் உணர்வு பூர்வமாக பங்கெடுத்த நினைவேந்தல் நிகழ்வுகள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழர் தாயகப்பகுதிகளினில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!! உணர்வுடன் திரண்டனர் மக்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com