வடமாகாண மீனவ சம்மேளன பிரமுகரும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவருமான கந்தவனம் சூரியகுமாரனது மகன் தமிழ் அமுதன்-22வயது இன்று அதிகாலை வடமராட்சியின் இன்பருட்டிப்பகுதியினில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்;.
இன்று காலை 4 மணிக்கும்; ஆறு மணிக்குமிடைப்பட்ட வேளையினில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.ஏற்கனவே வன்னி இறுதி யுத்தத்தினில் சரணடைந்த இவரது மற்றொரு சகோதரர் பற்றி இன்னமும் தகவல்கள் இல்லாதுள்ள நிலையினில் தற்போது இவரும் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பருத்தித்துறை முகாமினை சேர்ந்த புலனாய்வு பிரிவினை சேர்ந்த சிலரால் தான் பின்தொடரப்படுவதாகவும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக தனது குடும்பத்தவர்களிடம் தமிழ் அமுதன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.அத்துடன் கடத்தப்பட்ட பின்னர் அவரது கைத்தொலைபேசி மூலம் குடும்பத்தவர்களிற்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில் நால்வர் கொண்ட கும்பலால் துப்பாக்கி முனையினில் கடத்திச்செல்லப்பட்டு அடையாளம் தெரியாத முகாம் ஒன்றினுள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் தற்போது மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குறித்த இளைஞனின் கடத்தல் பின்னணி பற்றி தகவல்கள் ஏதுமில்லாத போதும் தந்தையாரது வாய்களை மூட வைக்க இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று நடைபெறும் சுனாமி பேரவல நினைவு நிகழ்வினில் கலந்து கொள்ள அவரது சகோதரி வடமராட்சி கிழக்கிற்கு நேற்றிரவு சென்றிருந்த நிலையினில் அவரது வீட்டிற்கு காவலிருந்த நிலையிலேயே இக்கடத்தல் நடந்துள்ளது.

0 Responses to வடமாகாண மீன சம்மேளன பிரமுகரது மகன் கடத்தப்பட்டார்! வடமராட்சியின் இன்பரூட்டியினில் சம்பவம்!!