வடக்கிலுள்ள தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களை இராணுவம் அழித்து வருகிறது. அண்மையில் கூட வலிகாமம் வடக்கில் இந்து ஆலயமொன்று இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு படை என்கிற பெயரில் எமது நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் எமது பாரம்பரிய அடையாளங்களை கண்டுகொள்ளாமல், அழிக்கும் முகமாக நடக்கின்றனர். இதனால், எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு பல விதத்திலும் தடைகள் விதிக்கப்பட்டது. ஆனாலும், எமது மக்கள் தமது வீடுகளில் விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாகிய நாமும் மரங்களை நாட்டி அஞ்சலியை செலுத்தியுள்ளோம். இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை சிங்கள மக்களுக்கு இருக்கும் போது, எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமையை நாம் எப்படியாவது நிலைநாட்ட வேண்டும். எனவே, தை பொங்கல் அன்று பொங்கலிடுவதற்கு முன்னர் சிட்டி விளக்கொன்றை ஏற்றி அஞ்சலி செலுத்துவோம் என்று அவர் மேலும் வேண்டிக்கொண்டுள்ளார்.

0 Responses to தமிழர்களின் வரலாற்று சின்னங்களை இராணுவம் அழிக்கின்றது: தம்பிராசா குருகுலராஜா