வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்பட வில்லை. முதன் முதலில் டெல்லியில் போட்டியிடுவது சந்தோஷம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அருகே உள்ள பஞ்செட்டியில் 14 ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.
பின்னர் நிருபர்கள் அவரிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதில் அளிக்கையில் :
கேள்வி: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறதே?
பதில்: மக்களை ஏமாற்றும் அரசியல் நடந்து வருகிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு போனால் கூட என்ன தீர்மானம் நிறைவேற்ற முடியும்? ஆனால் தொகுதி மக்களை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம்.
கேள்வி: தேமுதிகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களை நீங்கள் ஏன் நீக்காமல் வைத்து இருக்கிறீர்கள்?
பதில்: இது கட்சி விவகாரம். அதுபற்றி உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: உங்கள் கட்சியை விட்டு விலகி சென்ற எம்.எல்.ஏ. ஒருவர் தைரியம் இருந்தால் எங்களை விஜயகாந்த் நீக்கிப்பார்க்கட்டும் என்று கூறியுள்ளாரே?
பதில்: முதலில் அவர்களை தைரியம் இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.
கேள்வி: டெல்லி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்பட வில்லை. முதன் முதலில் டெல்லியில் போட்டியிடுவது சந்தோஷம். 65 ஆண்டுகள் இருந்த கட்சியும், 40 வருடம் இருந்த கட்சியும் டெல்லி வாழ் தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு தைரியம் இல்லை. தேமுதிக தேசிய முற்போக்கு கட்சி. அதனால் போட்டியிடுகிறோம். எங்களுக்கு எல்லா தைரியமும் இருக்கிறது.
கேள்வி: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அவரே முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற உத்தரவிட்டு உள்ளாரே?
பதில்: தமிழகத்தில் உள்ள முதலமைச்சர்களை 2 விதமாக பார்க்கிறேன். ஒருவர் முள்ளிவாய்க்கால் போர் நடந்தபோது உயிர் இழந்த தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இப்போதைய முதல்வர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளார் என்று விஜயகாந்த் கூறினார்.

0 Responses to டெல்லி தேர்தல் : வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படவில்லை : விஜயகாந்த்