Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருமதிப்புக்குரிய பெருந்தலைவர் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கான தனது மரியாதை வணக்கத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

தனது அரசவை அமர்வின் போது நெல்சன் மண்டேலா அவர்களுக்கான வணக்கத்தினை தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தென்னாபிரிக்காவில் உள்ள Nelson Mandela Foundationடம் உத்தியோகபூர்வமான முறையில் தனது மரியாதை வணக்கத்தினை கையளித்துள்ளது.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த மரியாதை வணக்கக் கடிதத்தினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தென்னாபிரிக்க பிரதிநிதி கந்தா படையாச்சி அவர்கள் கையளித்திருந்தார்.

தென்னாபிரிக்காவினை மட்டும் நெல்சன் மண்டேலா அவர்கள் விடுவிக்கவில்லை, அவர் இனப்பாகுபாடு ,வெறுப்புணர்வு அடக்குமுறை ஆகியவனற்றில் இருந்தும் மானிட சமூகத்தினை விடுவித்துள்ளார் என தனது மரியாதை வணக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், நெல்சன் மண்டேலா அவர்களை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்ட வெற்றியின் சாட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலா அவர்கள் 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரச தலைவராக பொறுப்பேற்று, நோபல் சமாதானப் பரிசு பெற்ற உலகத் தலைவராக விளங்கிய போதும் அவரை பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து 2008 ஆண்டேதான் அமெரிக்க அரசு முறைமையாக நீக்கியிருந்தது.

ஏன் இந்த மிக நீண்ட கால நீட்சி என குறித்துரைத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் கொடும் சிறைக்குள் வதைக்கப்பட்டாலும் தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் நீதிக்கான போராட்டத்தை உலகமயப்படுத்தி வெற்றி கண்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மனித சமத்துவத்தின் மகிமையை விட்டுக் கொடுப்பற்ற போராட்டம் மூலம் உலக மனச்சாட்சியைத் தட்டி எழுப்பி வெற்றி முரசறைந்த ஒரு மகத்தான அப்பெருந்தலைவரது உறுதியான வழித்தடத்தில் நாமும் எமது இலக்கினை அடையலாம் என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், சுதந்திரத்துக்கான நீண்ட பயணத்திற்கு எம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

0 Responses to நெல்சன் மண்டேலாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com