நேற்று (30-11-13) மாலை 6 மணியளவில் தேசியக் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை வைத்தியர் அல்பிரேட் அவர்கள் ஏற்றிவைத்தார். மண்டபத்தில் உள்ள மக்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக கைகளில் சுட்டிகள் ஏந்திய வண்ணம் புனிதர்களின் பாடல் இசைக்க மண்ணின் மைந்தர்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிப்பிழம்பாக மக்கள் மண்டபம் நிறைந்து காணப்படடனர்.பாடல் நிறைவு பெற மக்கள் நிரை நிரையாக சென்று புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமானது சிறுவர்கள் தொடக்கும் பெரியவர்களுமாய் வணக்க நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியாக கொடியிறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவ பெற்றது.
0 Responses to ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்