இந்திய இழுவைப்படகுகளினால் எமது கடல் வளம் ஒட்டுமொத்தமாக சூறையாடப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமான இந்திய இழுவைப்படகுகள் இந்திய- இலங்கை கடல் எல்லையைத் தாண்டி எமது கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றன.
ஆனால், அவற்றினால் எமது கடல் வளம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. இது முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும் இல்லாத பட்சத்தில் எமது கடற்பரப்பிலும் மீன்கள் இல்லாமற்போகும் வாய்புள்ளது என்றார்.
வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மன்னார் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்திய இழுவைப்படகுகள் தமது கடற்பரப்பில் வளத்தை ஒட்டுமொத்தமாக வாரி அழித்து விட்டு இப்போது எமது கடற்பரப்புக்குள் நுழைந்து வளத்தை சூறையாடும் வேலைகளில் ஈடுபடுகின்றன. கடலில் மீன்களுக்கு தேவையான வளங்களை அவர்களின் இழுவைப்படகுகளின் வலைகள் ஒட்டுமொத்தமாக வாரிச்சுருட்டுகின்றன. இதனால், வளமற்று போய் மீன் உற்பத்தி குறையும். இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபை விரைவில் மேற்கொள்ளும். இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்காது விட்டு பிரச்சினையை பெரிதாக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மத்திய அரசாங்கத்தினால் நியமனம் பெற்ற திணைக்களங்களின் செயலாளர்கள் வடக்கு மாகாண அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறி செயற்படும் தன்மை காணப்படுவதாகவும், ஆனாலும் சட்டத்தின் பிரகாரம் அனைவரும் செயற்படும் சூழல் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் வளத்தை சூறையாடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்