Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை ஆதர்ஷ் குடியிருப்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக இருந்த தேவயானி கொப்ரகடேயின் தந்தையும், தங்கையும்  முறைகேடாக வீடு பெற்றுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பையில் முக்கிய நபர்களுக்கு குறிப்பாக கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில ஆதர்ஷ் குடியிருப்பு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டியது.  ஆனால், இது முறையான அனுமதி பெற்று, தரமான முறையில் கட்டப்பட வில்லை என்கிற குற்றசாட்டு ஏற்கனவே எழுந்திருந்த நிலையில்  இந்த குடியிருப்பில் சிபாரிசின் பேரில் பலரும் முறைகேடாக வீடுகளைப்  பெற்றது தெரிய வந்தது.

இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், இன்று அம்மாநில முதல்வர் பிருத்வி ராஜ் சவான், இந்த ஆதர்ஷ் குடியிருப்பு தொடர்பான முறை கேடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த முறைகேடான வீடுகள் பெற்றவர்களில் அமெரிக்க அரசால் பணிப்பெண் விசா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய தேவயானி  கொப்ரகடேயின் தந்தையும், தங்கையும் கூட அடங்குவர் சில தகவல்கள் கூறுகின்றன.

0 Responses to ஆதர்ஷ் குடியிருப்பில் தேவயானி தந்தையும், தங்கையும் முறைகேடாக வீடு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com