Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றி ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அக்கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. கூட்டத்தை பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் சாதனை படைத்துள்ளது. முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை கட்டுக்குள் இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டது. உள்நாட்டு பாதுகாப்பு மோசமானதோடு, அண்டை நாடுகளுடனான உறவும் சீர்குலைந்து உள்ளது. ராஜ்ஜிய உறவுகளை மேம்படுத்த தவறிய காங்கிரஸ் கூட்டணி அரசு சீனா, இலங்கை மற்றும் சில நாடுகளுடனான பிரச்சினைகளை சரிவர கையாளவில்லை. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் வலுவான அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் பாரதீய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து விட்டால் தங்களுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

மதவாத சக்திகள் என்று சோனியா காந்தி பேசுகிறார். காங்கிரஸ்தான் மிகப்பெரிய மதவாத கட்சி. தேசத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் மூலம் அந்த மாநிலம் முன்னேற்றம் அடையுமானால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம் தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர் பங்குகொள்வதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுமானால், அதை பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

0 Responses to தேசத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது: ராஜ்நாத் சிங் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com